தரவுகளை பகிர்வதில் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் செயலி வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் புகைப்படம், வீடியோ மற்றும் முக்கியமான தரவுகள் உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தூரத்தில் இருப்பவர்களுடன் வீடியோ கால் செய்வது உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது வாட்ஸ் அப். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக வாட்ஸ் ஆப் செயலி தேவைப்படுகிறது.
சாட்டிங், வீடியோ கால், தரவுகளை பகிர்தல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டாலும், எல்லாவற்றிற்கும் முதன்மையாக வாட்ஸ் அப் இருப்பதற்கு காரணம், அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிடுவது தான்.
பகிரப்படும் புகைப்படங்களை ஒருமுறை மட்டுமே பார்க்கும் புது வசதியை வாட்ஸ் ஆப் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பயனாளர்கள் ATTACH FILES பட்டன் மூலமாக புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிரும்போது, sent பட்டனுக்கு முன்னதாக ஒன்று என வட்டமிடப்பட்ட பட்டன் திரையில் தோன்றும். அதனை தேர்வு செய்து அனுப்பப்படும் தரவுகளை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். அதேநேரத்தில், வழக்கம்போல் பகிரப்படும் தரவுகள் பழைய முறைப்படியே பயனாளர்களுக்கு செல்கிறது.
இதன்மூலம், ஒருநபருக்கு தவறுதலாக புகைப்படம் அனுப்பப்பட்டால் கூட, அதனை ஒருமுறைக்கு மேல் அவர்களால் காண முடியாது. அதேநேரத்தில், புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளும் வசதியில் ந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், முதலில் புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இதனை சரிசெய்து, புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிடவும் வாய்ப்புள்ளது.
கட்டுரையாளர்: தென்றல் பிரபாகரன்