இனி வெப் சீரிஸ்-க்கும் விருது வழங்கப்படும்; மத்திய அரசு அறிவிப்பு…

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடப்பாண்டு முதல், வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும்…

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடப்பாண்டு முதல், வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

OTT இயங்குதளங்கள், மாறுபட்ட மற்றும் பல வகையான திரைப்படங்கள் மற்றும் தொடர்களைப் பார்ப்பதற்கு மிகவும் விருப்பமான ஒரு கேளிக்கை தளங்களாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த தளங்களில் மக்கள் தங்கள் இருப்பிடத்திலேயே அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்க அனுமதிக்கிறது.

அந்த வகையில் , நடப்பு ஆண்டுக்கான 54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பா் 20 முதல் 28- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறந்த இணையத் தொடா் விருது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில், முதன் முறையாக நடப்பாண்டு முதல், சிறந்த வெப் சீரிஸிக்கான விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செளியிட்டுள்ள டிவிட்டர் அறிக்கையில், ‘வரும் 54-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இணையத் தொடருக்கான விருதை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கலைத் தகுதி, கதையின் சிறப்பம்சம், தொழில்நுட்பத் திறன் மற்றும் ஒட்டுமொத்த சமூகத் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய மொழிகளில் முதலில் தயாரிக்கப்பட்டு ‘ஓ.டி.டி.’ தளங்களில் வெளியடப்பட்ட இணையத் தொடருக்கு இந்த விருது வழங்கப்படும்.

 

இந்தியா பல்வேறு அரிய திறமைகளால் நிரம்பியுள்ளது. முன்னேற்றமே குறிக்கோளாய், பல கோடி கனவுகள் மற்றும் சொல்லப்படாத கதைகளுடன் உலகை வழிநடத்த தயாராக உள்ள புதிய இந்தியாவின் கதையை இயக்குநா்கள் சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இந்தியாவின் ‘ஓ.டி.டி.’ துறையில் முதலீட்டை வாயப்பை உருவாக்குதல், இந்திய மொழிப் படங்கள், அதன் அரிய திறமைகளை அங்கீகரித்தல் என ‘ஓ.டி.டி.’ துறையின் வளா்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தலை இந்த விருது நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.