முக்கியச் செய்திகள் தமிழகம்

திராவிடத் தடம் என்ற பெயரில் நடை பயணம்

திராவிடத் தடம் என்ற பெயரில் தி.நகர் பனகல் பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை
திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நடை பயணம் நடைபெற்றது.

நீதி கட்சியின் தலைவர்கள் பெயர் கொண்ட பகுதியின் வழியாக திராவிடத் தடம் என்ற
நடைபயணம் பனகல் பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை நடைபெற்றது. திராவிட தடம் நடை பயணத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா,மயிலை வேலு, ஜெ.கருணாநிதி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன் உள்ளிட்ட 300-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திராவிடத் தடம் என்ற டி-ஷர்ட் அணிந்து பதாகைகளை ஏந்தி பனகல் பூங்கா முதல்
பாண்டி பஜார் வழியாக நடேசன் பூங்கா வரை திமுக நிர்வாகிகள் ஆங்காங்கே நின்று
ஒலி பெருக்கி மூலம் நீதிக்கட்சி தலைவர்களின் வரலாற்றையும், திராவிட இயக்க
பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தனர்.

திராவிடத் தடம் நடை பயணத்தின் போது நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற
உறுப்பினர்கள் டிஆர்பி ராஜா & மயிலை வேலு :-

 

காலையிலேயே நடைபெறும் இந்த நடை பயணம் அரசியல் நடைபயணம் அல்ல. திராவிட
இனத்துக்கான நடை பயணம். திராவிடம் ஒரு மாதம் மட்டுமல்ல, ஆண்டுதோறும் அனுதினமும் கொண்டாடப்பட வேண்டிய இயக்கம்.

இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தன் எழுச்சியோடு திராவிடத்தடம் நடைபயணத்தில் பங்கேற்க பலர் முன்பதிவு செய்து
வந்துள்ளார்கள்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் இளைஞர்களுக்கு விளக்கும்
வண்ணம் இந்த நடை பயணம் நடைபெறுகிறது. திராவிட இயக்கத்தின் பெயர் நிறைந்த
தலைவர்கள் இருந்த ஊரான தி.நகரில் நடைபெறும் நடை பயணத்தில் ஆங்காங்கே நின்று
திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவின் கோரமுகத்தை வெளிக்காட்டும் புகைப்படம்!

Halley Karthik

அரசின் கஜானாவை அதிமுக அரசு காலி செய்துவிட்டது; அமைச்சர் குற்றச்சாட்டு

G SaravanaKumar

7வது மெகா தடுப்பூசி முகாம்; தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது

Halley Karthik