விலங்குகளை விரட்ட குரல் எழுப்பும் கருவி – நெல்லை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு

பயிர்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு சோலார் மின்சாரத்தில் குரல் எழுப்பும் புதிய கருவியை நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து சாதனை பinveடைத்துள்ள இளைஞர் குறித்து விவரிக்கிறது இந்த…

பயிர்களைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளை விரட்டுவதற்கு சோலார் மின்சாரத்தில் குரல் எழுப்பும் புதிய கருவியை நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து சாதனை பinveடைத்துள்ள இளைஞர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையையும், மாஞ்சோலை தேயிலை எஸ்டேட்டையும் தன்னுள்ளே கொண்டு மிகப்பெரிய இயற்கை நிலமாக திகழும், மணிமுத்தாறில் தற்போது நெற்பயிர் சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அருகில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து யானை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இங்கிருக்கும் விவசாயிகளுக்குப் பெரிய சவாலே வன விலங்குகளை விரட்டுவதுதான். இதற்காக விவசாயிகள் இரவு, பகலாக விவசாய நிலங்களில் காவல் இருந்து பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

விவசாயிகளின் துயர நிலை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த தமிழழகன் என்ற இளைஞர் புதியதொரு கருவியைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், விலங்குகளின் வருகையை சென்சார் மூலம் கண்டறிந்து குரல் எழுப்பும் கருவியை உருவாக்கியுள்ளார். சோலார் மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கருவியில், விலங்குகளை விரட்டுவதுபோல குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூரத்திற்குள் இந்த கருவிக்கு குறுக்கே வனவிலங்குகள் சென்றால், சென்சார் கருவி வெளிச்சத்தை உமிழ்ந்து ஒலி பெருக்கி குரல் எழுப்பும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து சாதனை படைத்துள்ள இளைஞரின் குரல் எழுப்பும் கருவி அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.