அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கும் விவேக் ராமசாமி – இணையத்தில் வைரல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கப் போகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, 16 வயது இளைஞனுடன் உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் இறங்கப் போகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, 16 வயது இளைஞனுடன் உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக உள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் களம் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது.

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  விவேக் ராமசாமி, 16 வயது இளைஞனுடன் உரையாடிய வீடியோவைப் இன்ஸ்டாகிராமில்பகிர்ந்துள்ளார். வீடியோவில், எப்படி வெற்றி பெறுவது என்ற  கேள்விக்கு அவர் பதிலளிப்பதைக் காட்டுகிறது. அவரது இந்த பேட்டி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.