“ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை” ; வாஷிங்டன் துப்பாக்கி சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்…!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். வாஷிங்டனில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டொனால்டு டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர்  “வாஷிங்டன் டி.சி. ஹோட்டல் ஒன்றில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப், அவரது மனைவி மற்றும் துணை அதிபர் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, அது சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.