பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு; அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம்…

விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதற்கு பாஜக, இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிர்வை செய்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா காலத்தில் பொதுநலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்து தலை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.