முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

“விக்ரம்” வெற்றி: லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் தரிசனம்

விக்ரம் திரைப்படம் உலக அளவில் வசூலைக் குவித்து வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் நடித்த படங்களிலேயே மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் செய்தது குறிப்பிடித்தக்கது. தொடர்ந்து, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் விக்ரம் திரைப்படம் வெற்றி நடைபோட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜுக்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு  அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக் கமல் கமல் வழங்கியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை மிகுந்தவரான லோகேஷ் கனகராஜ் கைதி பட வெற்றிக்குப் பின்னர் ராமேஸ்வரம் சென்று வந்தார். அதேபோல, விக்ரம் திரைப்பட வெற்றிக்குப் பின்னரும் தனது படக் குழுவினருடன் அண்மையில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, திருப்பதியில் லோகேஷ் கனகராஜ் தனது படக் குழுவினருடன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் லோகேஷ் கனகராஜ், தனது படக் குழுவினருடன் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அட்டூழியம் செய்த யானை; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

Jayasheeba

”இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது” – சரத்குமார்

G SaravanaKumar

கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனுக்கள் வந்தால் நடவடிக்கை-மனித உரிமை ஆணையம்

Web Editor