பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு தங்கலான் எனப்
பெயரிட்டப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும்
புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். விக்ரமின் 61வது படம் இது. கேஜிஎஃபை மையமாக வைத்து நிலக்கரி சுரங்க கதைக் களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் சமீபத்தில் தொடங்கியது. பா.ரஞ்சித் தனது
வழக்கமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தங்கலான் என்றால் ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பற்றிதான் இதிலும் சொல்லப்படுகிறது என்று இதன் டீசர் வீடியோவிலேயே தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







