விக்ரம்-2 படத்திற்காக முதல் முறையாக டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளன. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம்-2 திரைப்படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படம் திரைக்கு வருவதையொட்டி, படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை விக்ரம் படத்திலிருந்து டீஸர், ட்ரெய்லர், 2 பாடல்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மக்களிடம் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய உள்ள விக்ரம்-2 படத்திற்கு பல்வேறு நூதன முறையில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம்-2 படத்திற்கு ரசிகர்களை கவர விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு வருகை முனையத்தில் நுழைவு மற்றும் கார் நிறுத்தம் பகுதிகளில் உள்ள டிஜிட்டல் விளம்பரங்கள் வைக்கப்பட்டு விக்ரம் படத்தில் கமல்ஹாசன் தோன்றிய வேடங்களின் பட ஸ்டில்கள் திரையிடப்படுகின்றன. விமான நிலையத்தில் டிஜிட்டல் விளம்பரம் முலம் பட விளம்பரம் செய்வது இதுவே முதல் முறையாகும்.








