காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விடுமுறையின்றி பணியாற்றுவதால், மன வேதனையும், மனச் சோர்வும் அடைந்து வருவதாகவும்,
இதனால், வாரம் ஒரு முறை விடுமுறை வழங்க வேண்டும் என காவலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்ததனர். தற்போது இந்த கோரிக்கையை ஏற்று வாரம் ஒருநாள் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது இனிய செய்தி என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் விடுமுறை அறிவித்திருப்பதற்கும் வரவேற்பு தெரிவித்துள்ள அவர், காவலர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை வழங்கப்படும் என அறிவித்த டிஜிபி சைலேந்திரபாபுவுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.







