நெல்லையில் ரசிகர் ஒருவர் தன் உடல் முழுவதும் நடிகர் விஜயின் உருவத்தை
டாட்டுவாக வரைந்து, வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் இயக்கியதில் உருவாகி
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படத்தில் ஃபஸ்ட் லுக்
விஜயின் பிறந்தநாளையொட்டி இன்று நெல்லை திரையரங்கில் வெளியிடப்பட்டது.
நடிகர் விஜயின் பிறந்தநாளில் லியோ திரைப்படத்தை வரவேற்று நெல்லை விஜய்
ரசிகர்கள் ஆடி பாடியும், கேக் வெட்டியும் உற்சாக கொண்டாடினர்.
இதில் ரசிகர் ஒருவர், வித்தியாசமாக, தன்னுடைய உடல் முழுவதும் நடிகர் விஜயின்
உருவத்தை டாட்டுவாக வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ரசிகர்களின்
கவனத்தை ஈர்த்தது.







