“விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார்” -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

“விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார்”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில்…

“விஜய் நல்லது தானே சொல்லியிருக்கிறார்”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில்  நடைபெற்றது.

இந்நிலையில், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என நடிகர் விஜய் பேசியது குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:

நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வரவேண்டும், வரவேண்டாம் என கூற யாருக்கும் உரிமையில்லை.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.