விஜய் ஆண்டனியின் `Hitler’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர்…

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

இதனையடுத்து,  விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார்.  அதனுடன்  ‘படைவீரன்’,  ‘வானம் கொட்டட்டும்’  உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.  இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.  முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.  செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியானது.  இந்த நிலையில்,  இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.