நடிகர் விஜய்க்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்த விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக்குளை ட்ரெண்ட் செய்து வரும் விஜய்-அஜித் ரசிகர்கள்.
தல தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய், அஜித் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். எனினும், சமூக வலைத்தளங்களில், பல ஆண்டுகளாக விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாததால், வரி செலுத்த நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, என விஜய்யை வரி கட்ட அறிவுறுத்தியதுடன், அபராதமாக ஒரு லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்க உத்தரவிட்டனர்.
அவ்வளவு தான் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் சமூக வலைத்தளங்களில் போர் தெடங்கிவிட்டது. விஜயை விரும்பாதவர்கள் ஒரு பக்கம் வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்க, பதிலுக்கு விஜய் ரசிகர்கள் கடனை அடைங்க அஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.







