#Vidaamuyarchi திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு? வெளியான தகவல்!

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில்…

#Vidaamuyarchi shooting complete? Released information!

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார்.  இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.  இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.  அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர். இப்படத்தில் நடித்துள்ள அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரின் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.