31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

வேலூரில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

வேலூரில் ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக பதிலளிக்க தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ், ராஜேஸ்வரி மற்றும் பிரேம் ஆகியோர் பலியானதாக தகவல் வெளியானது. இதேபோல ராஜேந்திரன், மதன், லீலாவதி, கபாலி ஆகிய ஆகிய 4 நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், சம்பவம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மருத்துவ கல்வி இயக்குனர் மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் ரெய்டு

G SaravanaKumar

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

EZHILARASAN D

ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் – முத்தரசன் 

G SaravanaKumar