வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள் – முதலமைச்சர் #MKStalin புகழாரம்!

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265வது பிறந்தநாள் இன்று (ஜன.3) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி…

Veerapandia Kattabomman, Velunachiyar's birthday - Chief Minister #MKStalin pays tribute!

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265வது பிறந்தநாள் இன்று (ஜன.3) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி எனப் போற்றப்படும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்திப் போராடியவர்.  அவரது பிறந்த தினத்தை ஒட்டி அரசியல் தலைவர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

https://x.com/mkstalin/status/1875085812993552496

இந்த நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப்பதிவில், “ஆதிக்கத்துக்கு அடிபணியும் பேச்சுக்கே இடமில்லை எனத் தாய்நாட்டின் விடுதலைக்காக வெகுண்டெழுந்த தீரச்சுடர்களாம் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் புகழ் வாழ்க” எனத் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.