ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் திரைப்படத்தின் 3வது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இதற்கு பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர் ஹீரோ கெட் அப்பில் செம்ம மாஸாக இருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் புகைப்படத்துடன் கூடிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.
Get set for the 3rd single from #Veeran , Veeran Thiruvizha out Tomorrow ( May29 ) 5PM 💥🎊
Grand Worldwide Release On
JUNE 2@hiphoptamizha @ArkSaravan_Dir @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi pic.twitter.com/PBFAoyGXLh— Hiphop Tamizha (@hiphoptamizha) May 28, 2023
தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற ’தண்டர்காரன்’ பாடலும் ‘பப்பர மிட்டாய்’ பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. அத்துடன் ட்ரெய்லரரும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலான வீரன் திருவிழா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.