நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின.
மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது ரசிகர்கள் குஷியாகினர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் ’சீன் ஆ சீன் ஆ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில காரணங்களால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மாவீரன் படத்தை வெளியிடுவதில் இருந்து விலகியுள்ளது எனவும், இந்த படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
https://twitter.com/ShanthiTalkies/status/1663130380369788928?t=Ia8lUk-vwlHTs8CX9myB8Q&s=08
ஜூலை மாதம் 14-ம் தேதி மாவீரன் படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டப்பிங் வீடியோ ”வீரமே ஜெயம்” என்ற வார்த்தையை நடிகர் சிவகார்த்திகேயன் கூறும் வகையில் அமைந்துள்ளது. அவரது ரசிகர்கள் அந்த பதிவின் கமெண்ட் பகுதி முழுவதும், ”வீரமே ஜெயம்” என பதிவிட்டு வருகின்றனர்.







