தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அன்று பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழச்சி மாநிலம் முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கேட்டு மகிழ்ந்தனர். மேலும் இந்தியா மட்டுமின்றி ஐநா தலைமையகத்திலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடி உரையை கேட்கும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று 101வது மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், வீர் சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், “அவரது தியாகம், தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன… வீர் சாவர்க்கரின் ஆளுமை வலிமை மற்றும் பெருந்தன்மை கொண்டது” என்று கூறினார்.
முன்னதாக, ‘யுவ சங்கம்’ முயற்சியில் பங்கேற்றவர்களிடம் பேசிய பிரதமர் மோடி 22 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நினைவுகள் அவர்களின் இதயங்களில் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக இருக்கும். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் பலம் என தெரிவித்தார்.
குருகிராமில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 1860ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 75 மாவட்டங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் மத்திய அரசின் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
https://twitter.com/narendramodi/status/1662692698325757952?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








