விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வரும் 22-ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்கவும் : இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி சென்டிமெண்ட்டான வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. இத் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ.150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் வரும் 22ம் தேதி ஓடிடி தளத்தில் வாரிசு படம் வெளியாகவுள்ளதாக அப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்ரா கியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. அமேசான் பிரைமில் வாரிசு படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








