வேங்கை வயல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் மே 6ம் தேதி களம் இறங்க உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற சத்திய நாராயணா தலைமையிலான ஒரு நபர் குழு வரும் ஆறாம் தேதி புதுக்கோட்டைக்கு விசாரணைக்காக வரவுள்ளது.
ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் ஒரு நபர் ஆணையத்திற்குத் தமிழக அரசு எல்லா வித உதவியும் செய்யும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடைபெறும் இடம் அவருக்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
முன்னதாக சிபிசிஐடி போலீசார் முதல் கட்டமாக 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்று அதில் மூன்று பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் செய்து விட்டது.
எட்டு பேர் பரிசோதனைக்கு வர முடியாது என்று மறுத்து விட்டனர். மேலும் இரண்டாவது கட்டமாக புதிதாக 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ள நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையமும் தனது விசாரணையை வரும் மே ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும் தறுவாயை எட்டியுள்ளது.








