முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவை நிறுவியவர்களில் முக்கியவருமான வாஜ்பாயின் 2-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாஜ்பாயின் மகள் நமிதா கவுல் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுதினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மரியாதைக்குரிய அடல்ஜிக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்காக வாஜ்பாய் ஆற்றிய சேவைகளையும் முயற்சிகளையும் நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.







