முக்கியச் செய்திகள் சினிமா

பாடகராகவும் கலக்கும் நடிகர் வடிவேலு

4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் களம் இறங்கியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு. அவர் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறிய பிரச்சனை காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அவர் நடிக்காத போதிலும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மீம்கள் மூலமாக ரசிகர்கள் அவரை தொடர்ந்து ரசித்து வந்தனர். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்திலும் வடிவேலு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரீத் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் வடிவேலு நடிகராக மட்டும் அல்லாமல் பாடகராகவும் தற்போது கலக்கி வருகிறார். வடிவேலு இதற்கு முன்பு பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் பாடகராக களம் இறங்கியுள்ளார் வடிவேலு.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் வடிவேலு இரண்டு பாடல்களை பாடியுள்ளார். அப்பத்தா என்று தொடங்கும் அந்த பாடல் தற்போது வரை 1 கோடிக்கும் அதிகமானவர்களால் ரசிக்கப்பட்டுள்ளது. அதே போல பணக்காரன் என்ற பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது பிரீத் தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை நடிகர்களை கடந்து வந்த நிலையிலும் தற்போது வரை வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

அவர் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும், மீண்டும் நகைச்சுவையில் கலக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்

G SaravanaKumar

தமிழ்நாட்டில் மிகப்பெரிய புத்தக பூங்கா உருவாக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

Arivazhagan Chinnasamy

கர்நாடக தேர்தல் : நண்பகல் 12மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 121 இடங்களில் முன்னிலை

Web Editor