#USOpen – முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.  ஆண்டுதோறும் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யூஎஸ் ஓபன். அந்த வகையில் இந்தாண்டு…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்தார். 

ஆண்டுதோறும் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் பிரபலமானவை. அதில் ஒன்று யூஎஸ் ஓபன். அந்த வகையில் இந்தாண்டு கடைசி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சுமித் நகல் தோல்வியடைந்தார். நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூரிடம் 1-6, 3-6, 6-7 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

தற்போது தரவரிசையில் 73-வது இடத்தில் உள்ள சுமித் நகல், ஆக.29ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில், ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவுடன் இணைந்து களம் காண்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.