சீனாவுடனான ராணுவ கூட்டணியில் இருந்து வெளியேறினால் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் உள்ள இந்திய வம்சவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளார்.அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது:
“டான்பாஸ் பிராந்தியத்தின் சில பகுதிகளை வைத்து, கெய்வ் நேட்டோவில் ரஷ்யா சேராமல் இருக்க வேண்டும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனாவுடனான தனது ராணுவக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் உக்ரைன் போரை நான் முடிவுக்குக் கொண்டு வருவேன்.
முன்னதாக மற்றொரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த விவேக் ராமசாமி கூறியதாவது :
“ரஷ்யா-சீனா ராணுவக் கூட்டணி அமெரிக்காவிற்கு பெரிய ராணுவ அச்சுறுத்தல். அதிபராக பதவியேற்ற பிறகு மாஸ்கோவிற்கு விஜயம் செய்வேன்.
ஹைப்பர்சோனிக் ஏவுகணை திறன்கள், ரஷ்யாவில் அணுசக்தி திறன்கள், நம்மையும் சீனாவையும் விட வெகு தொலைவில் உள்ளது. மேலும் சீனாவின் கடற்படை திறன்கள் நம்மை விட முன்னால் உள்ளன. இதனைப் பற்றி எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை. எனது வெளியுறவுக் கொள்கை அந்த கூட்டணியை பலவீனப்படுத்துவதை மையமாக இருக்கும்” என விவேக் ராமசாமி கூறினார்.







