சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் உதயநிதி மத உணர்வை பாதிப்பது போல் பேசியது தவறு, அமைச்சர் தலைக்கு விலை வைப்பது காட்டுமிராண்டித்தனம். விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாக பேசியுள்ளர். சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார். அப்போது உள்ள காலத்தில் சனாதனம் உருவாக்கப்பட்டது. அது எல்லா காலத்திற்கும் பொருந்தாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் ஆகாது. அப்படி வைத்தால் யார் மத்தியில் வெற்றி பெற்றாலும் மீண்டும் பாராளுமன்ற தேர்தல் வரும்.
ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பெருமாளின் 10 அவதாரத்தில் வாமன அவதாரம் தான் பிராமண அவதாரம். அது தான் ஓணம் பண்டிகை. அப்படி என்றால் பிராமணர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்கிறார் என்று அர்த்தம் என தினகரன் குறிப்பிட்டுள்ளார்.







