தேஜாவு படகுழுவிற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தேஜாவு படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள…

தேஜாவு படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் தேஜாவு. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தினை இயக்கியுள்ளார். இதில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளரும், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். டிரைலரை பார்த்து ரசித்த அவர் படக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இதில் தேஜாவு படத்தின் நாயகன் அருள்நிதி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி, இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும், கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர். தேஜாவு ட்ரைலர் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஜுலை 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.