இந்திய ஓவியர் டைப் மேத்தாவின் “ட்ரஸ்டு புல்” ஓவியம் ரூ.61.80 கோடிக்கு ஏலம்!

ரூ.61.8 கோடிக்கு விற்பனையான டைப் மேத்தாவின் “Trussed Bull” ஓவியம்…

நியூயார்க்கில் நடந்த கிறிஸ்டியின் ஏலத்தில் கடந்த மாதம் எம்.எஃப். ஹுசைனின் ஓவியம் ஒன்று ரூ.118 கோடிக்கு விற்பனையான நிலையில், அவரது சமகால மற்றும் நவீன ஓவியர் டைப் மேத்தாவின் ‘ட்ரஸ்டு புல்’ புதன்கிழமை மும்பையில் நடந்த சாஃப்ரான் ஆர்ட்டின் 25வது ஆண்டு ஏலத்தில் ரூ.61.80 கோடிக்கு ஏலம் போனது.

இந்தியாவின் முன்னணி நவீன ஓவியர்களில் ஒருவரான டைப் மேத்தா 1956ஆம் ஆண்டு வரைந்த “Trussed Bull” என்ற எண்ணெய் ஓவியம் (37″ x 41.5″) ரூ.61.8 கோடிக்கு விலைபோனது புதிய உலகச் சாதனையாக அமைந்துள்ளது. இந்த ஓவியம் மும்பையைச் சேர்ந்த அவரது மனைவி சக்கினா மேத்தா மூலம் டைப் மேத்தா ஃபவுண்டேஷனில் இருந்து ஏலம் விடப்பட்டது.

மேத்தாவின் மற்றொரு படைப்பான, பெயரிடப்படாத அக்ரிலிக் ஓவியம், கேன்வாஸில் ஒன்பது கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது அதற்கு கொடுக்கப்பட்ட அதிக மதிப்பீட்டான ஏழு கோடியை விட அதிகமாகும்.

சாஃப்ரான் ஆர்ட் நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.245 கோடி (அமெரிக்க டாலர் 29 மில்லியன்) விற்பனை நடந்தது. இது தெற்காசிய ஓவியங்களுக்கான உலகிலேயே மிகப்பெரிய ஏல விற்பனையாகும். மேலும், அம்ரிதா ஷெர்கில், எஃப்.என். சௌசா, சாக்தி பர்மன் உள்ளிட்ட முன்னணி ஓவியர்களின் படைப்புகள் இந்த ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகி, இந்திய கலைக்களத்திற்கு உலக அளவில் புதிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.