இணையதளத்தில் அனைவரின் கவனத்தயும் ஈர்த்து வருகிறது மாடு, எறும்பு , டைனோசர் பதிவிடும் டீவீட். இந்த வித்தியாசமான ட்விட்டர் பக்கங்களுக்கு அமோக ஆதரவு மக்களிடையே பெருகி வருகிறது.
இன்றைய இனைய உலகத்தில் ட்விட்டர் பயன்படுத்தாத மனிதர்களின் எண்ணிக்கை குறைவு. மனிதர்கள் மட்டும் இல்லை விலங்குகளும்தான் என்று கூறும் அளவிற்கு விலங்குகளின் பெயரில் ட்விட்டர் பக்கங்களை நெட்டிசன்களால் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், இனைய விரும்பிகள் அதிகம் பயன்படுத்தும் ட்விட்டர், தற்போது யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு விலங்குகளின் பெயரில் ட்விட்டர் பக்கத்தை தொடங்கி தினசரி நகைச்சுவையான டிவீட்டும் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாடு , டைனோசர் ட்வீட் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைப்போடு நிறுத்தி விடாமல், விலங்குகளின் பெயரில் ட்விட்டர் பக்கத்தயும் உருவாக்கி டிவீட்டும் செய்து இணையத்தை அசத்தி வருகின்றனர். மனிதர்கள் போலவே விலங்குகளும் தங்களின் ட்விட்டர் பக்க சுயவிவரத்தை (BIO) நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.
தற்போது ட்விட்டரின் ட்ரெண்டிங் இவர்கள்தான்.