ட்விட்டர் புளூ டிக் சேவை நிறுத்தம்- எலான் மஸ்க்

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக…

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

உலகின் மிக மதிப்புமிக்க வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் எலான் மஸ்க். அவர் சமீபத்தில் சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் நிறுவத்தில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவ்வப்போது அறிவித்து வருகிறார்.

ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்கை’ பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம் தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியானது. இதற்கு இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ட்விட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ செக் கட்டண சேவையை மீண்டும் தொடங்குவதை ட்விட்டர் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் புளூ செக் சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.