த்ரிஷா நடித்துள்ள ‘பிருந்தா’ வெப் தொடர் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த தொடரில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், மணி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, ராகேந்து மவுலி உட்பட பலர் நடித்துள்ளனர். ஆஷிஷ் தயாரித்த இந்தத் தொடருக்கு, சக்தி காந்த் கார்த்திக் இசையமைத்துள்ளார். இந்த தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இந்தத் தொடர் இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் இன்று சோனி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.








