மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதத்திற்கும் குறையாமல் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவையில் இன்று தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசுக்கு சொந்தமான அனைத்துப் பணிகளிலும் 30 சதவீதத்திற்கு குறையாமல் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு பணிகள், மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், மத்திய அரசின் நிதி உதவியால் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் என மத்திய அரசு தொடர்பான அனைத்துப் பணிகளிலும் பெண்களுக்கு குறைந்தது 30 சதவீதம் அளவிற்காவது இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என திருச்சி சிவா தாக்கல் செய்த தனி நபர் மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பில் மட்டுமல்லாது பதவி உயர்விலும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தாம் தாக்கல் செய்த தனி நபர் மசோதாவில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.





