வேளாண் மக்கள் குறைந்த வாடகையில் பயன்படுத்தும் வகையில் 22 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டர், கொத்துக்கலப்பைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 497 நிலமேம்பாட்டு இயந்திரங்கள், 1,226 சிறுபாசனத் திட்ட இயந்திரங்கள் மற்றும் டிராக்டர்களுடன் இயங்கும் வேளாண் கருவிகள் ஆகிவற்றை அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக 22 கோடியே 34 லட்சம் செலவில் 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள் ஆகியவை வேளாண் பொறியியல் துறையால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவதற்கு அடையாளமாக 25 டிராக்டர் ரோட்டர்களும், 25 டிராக்டர் கொத்து கலப்பைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் வந்தபோது அவரது தலையில் மரத்திலிருந்து பூக்கள் விழுந்த நிலையில், அதனை அகற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
வாகனத்திற்கு கொடியசைத்தது போதும் என்று தலைமைச்செயலாளர் கூறியபோதும், அடுத்து வரும் டிராக்டர்களுக்காக காத்திருந்து கொடியசைத்தார் ஸ்டாலின்.








