தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் உடைந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள…

பெருமழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் உடைந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்னும் படியாத சூழல் நிலவுகிறது. வெள்ள நீர் வடிய எப்படியும் 3 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிகிறது. மேலும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளையும் 5வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.