நடிகர் விக்ரம் பிறந்தநாள்: ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு!

நடிகர் விக்ரமின் பிறந்த நாளான இன்று ‘தங்கலான்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் திரைப்படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின்…

நடிகர் விக்ரமின் பிறந்த நாளான இன்று ‘தங்கலான்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் திரைப்படம் ‘தங்கலான்.  பா.ரஞ்சித்தின் தனது  ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.  இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : கும்பல் வன்முறை, பசுக் காவலா் சம்பவங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

‘தங்கலான்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.

இந்த தமிழ்,  தெலுங்கு,  இந்தி,  மலையாளம்,  கன்னட மொழிகளில் இந்த திரைப்டம் வெளியாக உள்ளது.  ‘தங்கலான்’ திரைப்படன் டீசர் அண்மையில் வெளியாகி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில்,  விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  அதில்,  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கலான் என தெரிவித்துள்ளனர்.  மேலும் அந்த வீடியோவில் விக்ரம் அவரது கதாபாத்திரத்திற்காக தயாராகும் முறை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது.  இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.