முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவ பணியாளர்கள் குடும்பத்துக்கு பணி வழங்கும் நடவடிக்கை தீவிரம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பரவத்தொடங்கியது. முதல் கொரோனா வைரஸ் கேரளாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் படிப்படியாக நாடு முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து உயிரிழப்பும் பதிவாகி வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு உள்பட மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொற்றில் இருந்து மக்களை காக்க மருத்துவ உழியர்கள், செவிலியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் தங்களது இன்னுரையும் பணயம் வைத்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 53 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டியவர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்து அனுப்ப அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: காங்கிரஸ் நாளை பேரணி

Gayathri Venkatesan

போராடித் தோற்ற விகாஸ் கிரிஷன்

Vandhana

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

Halley karthi