#Tirupati ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி கருட சேவை கோலாகலம் – ஏராளமானோர் பங்கேற்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று தங்க வாகன திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவரான…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று தங்க வாகன திருவீதி உலா நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவரான மலையப்பசாமி எழுந்தருளி கோயிலின் நான்கு மடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், பௌர்ணமி தினமான நேற்று (நவ.15) திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இதையும் படியுங்கள் : #UttarPradesh | அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

இவ்விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கருட வாகன புறப்பாட்டை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அதன்பின் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு தீப, தூப, நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இரவு 7 மணியளவில் திருப்பதி மலையில் உள்ள கோயிலின் மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருவீதி உலாவை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.