திருமலை-திருப்பதி தேவஸ்தான ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு!…

ஜனவரி 2024-க்கான ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் ஒதுக்கீட்டை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. ஜனவரி மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாதமாராதன சேவைகளுக்கு, அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணி முதல்…

ஜனவரி 2024-க்கான ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் ஒதுக்கீட்டை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

ஜனவரி மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாதமாராதன சேவைகளுக்கு, அக்டோபர் 18ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். டிக்கெட் பெற்ற பக்தர்கள் அக்டோபர் 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தி அவற்றை இறுதி செய்ய வேண்டும்.

கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை டிக்கெட்டுகள் அக்டோபர் 21ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். சேவை டிக்கெட்டுகள் அக்டோபர் 21 அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அங்கப்ரதக்ஷிணம் டோக்கன்களின் ஒதுக்கீடு அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி டிரஸ்ட் பிரேக் தரிசனம், அறை ஒதுக்கீடு அக்டோபர் 23ம் தேதி காலை 11 மணிக்கு
வெளியிடப்படும்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் அக்டோபர் 23ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு அனுமதி சீட்டுகள் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதி அறை முன்பதிவு அக்டோபர் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்கான, திருப்பதி திருமலையின் ஸ்ரீவாரி சேவா கோட்டா அக்டோபர் 27 அன்று காலை 10 மணிக்கும், நவனிதா சேவா கோட்டா 12 மணிக்கும், பரகாமணி சேவா கோட்டா பிற்பகல் 3 மணிக்கும் வெளியிடப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.