திருச்செந்தூரில் ஆவணி திருவிழா… வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்…!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி…

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 8-ம் நாளான இன்று சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில் நாள்தோறும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நேற்று 7-வது திருவிழாவான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நடைபெற்றது. கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து அலங்கார தீபாரனை நடைபெற்றது. பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்திக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் சிவப்பு வண்ண மலர்களை தூவி அரோகரா என பக்தி கோசங்கள் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எட்டு வீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று 8ம் நாள் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.