அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த மூன்று மணி நேரத்தில் தாமிழ்நாட்டில்  7 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில்…

அடுத்த மூன்று மணி நேரத்தில் தாமிழ்நாட்டில்  7 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருவண்ணாமலை, ராணிபேட், தூத்துக்குடி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.