“மிரட்டும் கனமழை” அவசர உதவி எண் – கனிமொழி எம்பி அறிவிப்பு!

தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு 80778 80779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி எம்பி கனிமொழி அறிவித்துள்ளார்.  நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால்…

தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு 80778 80779 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி எம்பி கனிமொழி அறிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட கடைகளில் மழைநீர் புகுந்தது.  தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவம்,  உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு உதவும் வகையில் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்,  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறோம்.  மருத்துவம், உணவு உள்ளிட்ட அவசர உதவிக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடர்பு கொள்ளவும்.  உதவிட முன்வரும் தன்னார்வலர்களும் இதில் தங்களை இணைத்து கொள்ளலாம்.

தொடர்பு எண்: +91 80778 80779

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.