ரஜினிகாந்தை விமர்சனம் செய்த ‘ரோஜா’ மன்னிப்பு கேட்க வேண்டும்; சந்திரபாபு நாயுடு ஆவேசம்!

நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, ஐதராபாத் நகரின்…

நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, ஐதராபாத் நகரின் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று புகழ்ந்து பேசியிருந்தார்.

 

இதற்கு அமைச்சர் ரோஜா கண்டனம் தெரிவித்த நிலையில், YSR காங்கிரஸ் கட்சியினரும் ரஜினியை விமர்சித்தனர். இந்நிலையில் ரஜினி மீதான விமர்சனத்தை வன்மையாக கண்டிப்பதாக தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி மீது திட்டமிட்டு தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஒய்எஸ்ஆர் கட்சியினரை அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் கட்டுக்குள் கொண்டு வருவதுடன், அந்த கட்சியினர் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.