கோடைகாலத்தில் மின்தடை இருக்காது – அதிகாரிகள் தகவல்!

 கோடைகாலத்தில் மின்தடை இருக்காது எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் மாதந்தோறும் பல இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் நலன் கருதிப் பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில்…

 கோடைகாலத்தில் மின்தடை இருக்காது எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் மாதந்தோறும் பல இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் நலன் கருதிப் பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாகப் பொதுமக்களும் எந்த ஒரு சிரமத்தையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படும் நாளை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதியளித்துள்ளது. மேலும், கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய ஊழியர்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கத் தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால் கோடைக்காலத்தில் மின்தடை இருக்காது எனவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.