தி லெஜண்ட் படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது என்று படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
படத்தில் நடித்தவர்களும், ரசிகர்களும் படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்தனர். பின்னர், படம் குறித்து அவர்கள் கூறுகையில்,”லெஜண்ட் சரவணன், உண்மையில் லெஜண்ட். இந்தப் படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. இந்தச் சமூகம் பார்க்க வேண்டிய ஒரு படம் இது. குடும்பத்துடன் பார்த்து ரசித்தோம். சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருந்தன” என்று தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடித்து, “தி லெஜண்ட்” தயாரித்துள்ளார். ஊர்வசி ராவ்டேலா,
கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள “தி லெஜண்ட்” திரைப்படம், உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
“தி லெஜண்ட்” படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த படத்தில் விஞ்ஞானியாகச் சரவணன் நடித்துள்ளார். தி லெஜண்ட் படத்தைத் தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். இந்த நிலையில் எபிஐ ஃபில்ம்ஸ் நிறுவனம் இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியிட்டது.