விஜய் நடிப்பில் செ.5 ஆம் தேதி வெளியாக உள்ள தி கோட் படத்திற்காக, படக்குழு தீவிர புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை, ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள நிலையில், படம் இந்த வாரம் வியாழன்கிழமை திரைக்கு வர உள்ளது.
ரிலீசை முன்னிட்டு, படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் ஸ்கை டைவிங் குழுவினர் மூலம் ஆகாயத்தில் படத்தின் போஸ்டரை பறக்கவிட்டு, படக்குழுவினர் புரமோஷன் செய்தனர். இந்த வீடியோ ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா, பிரசாந்த், சினேகா, லைகா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.







