33.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

“சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு ‘மகளிர் உரிமைத்தொகை திட்டமே’ சாட்சி” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“சொல்வதைச் செய்வான் கலைஞர் மகன் என்பதற்கு ‘மகளிர் உரிமைத்தொகை திட்டமே’ சாட்சி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை தொகைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் அன்னை இந்திராகாந்தி சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காஞ்சிபுரம் முக்கிய வீதிகளில் வந்தபோது வழியெங்கும் திரண்டிருந்த பெண்கள் ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து அண்ணா நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.

இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஏடிஎம் அட்டைகளை பெண்களுக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான காணொலி விழா மேடையில் திரையிடப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அண்ணா பிறந்தநாளை ஒட்டி தொடங்கப்பட்ட மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் பயனைவார்கள். சொன்னதை செய்வான் கருணாநிதி மகன் என்பதற்கு மகளிர் உரிமை தொகை திட்டமே சாட்சி.

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த தாமதானது. ஆனால், அதற்குள் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்பியதோடு, அதனை முடக்க நினைத்தனர்.

மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கியது மிகப்பெரிய பெருமை. உலகை வழிநடத்துபவர்கள் தாய்மையும், பெண்மையும்தான். என்னை வழி நடத்தியது தாயின் அரவணைப்பு தான். மேலும் எனது மனைவி துர்கா தனக்கு எப்போது தூணாக விளங்கி வருகிறார். எனது மகள் செந்தாமரை தன்னம்பிக்கையின் நட்சத்திரம்.

எனக்கு கிடைத்த தாய், மனைவி, மகள் போன்று ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் அன்பாக நடந்து கொள்கிறார்கள். பெண்களின் கனவை நிறைவேற்றும் ஆட்சி திமுக ஆட்சி.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதே திராவிட மாடல் அரசு. பெண்களை அனைத்து நிலைகளிலும் உயர்த்துவதே திராவிடமாடல் ஆட்சியின் நோக்கம்.

குழந்தை திருமணத்தை ஆதரித்து பேசுகிற பிற்போக்குவாதிகளும் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கின்றனர். சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாததால் சிலர் அரசு மீது கோபத்தில் உள்ளனர்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சை முழுமையாக பார்க்க காணொலி: 

🛑 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mkstalin

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!

Web Editor

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்!

Jayapriya

முதலமைச்சரின் செயல்பாட்டுக்கு எதிராக ஆளுநர் எந்த முடிவும் எடுக்க முடியாது – தொல்.திருமாவளவன்

Web Editor