இந்தோனேசியாவில் ரோபோவை போல் வேடமணிந்து சாலையில் பயணிப்பவர்களிடம் யாசகம் கேட்கும் சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தோனேசியா டெபோக் நகரை சேர்ந்தவர் 29 வயதான புரியந்தி. இவருக்கு 15 வயதில் ராஃபி என்ற மகன் இருக்கிறார். இருவரும் தலையிலிருந்து கால் வரை சில்வெர் பெயிண்டை பூசிக்கொண்டு சாலையில் பயணிப்பவர்களிடம் காசு கேட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் ரோபோவை போல் வேடமணிந்து காசு கேட்கும் சம்பவம் அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து அவர் கூறியதாவது, கொரோனாவின் தாக்கத்தால் வாழ்வின் பொருளாதார நிலை சரிந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் இதுபோன்ற வேலை செய்வதற்கு வெட்கபடவில்லை என்று கூறினார்.
இதுமட்டுமின்றி, அவருக்கு சொந்த தொழில் செய்வதற்கு ஆசையாக இருப்பதாகவும் அதற்கு போதிய பணம் இல்லை என்றும் தெரிவித்தார்.