வெளியானது ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர்!

இயக்குனர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.  இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.  இத்திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார். …

இயக்குனர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’.  இத்திரைப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.   இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  சமீபத்தில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த டிரைலரில் அரசியல் வசனங்கள் கவனம் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.